சிஎஸ்கே அணிக்காக தோனி தன்னுடைய 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்பளே தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் இந்தாண்டு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது. துபாயில் நடைபெற இருக்கும் முதல் போட்டியில் சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸ் அணியும் களம் காண்கிறது. சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்களான சுரேஷ் ரெய்னாவும், ஹர்பஜன் சிங்கும் தொடரில் இருந்து சொந்தக் காரணங்கள் காரணமாக விலகியுள்ளனர். ஆனாலும் அணி முழு பலத்துடன் தோனி தலைமையில் துபாயில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
தோனி குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்பளே பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் "தோனி தன்னுடைய 100 சதவீத அர்ப்பணிப்பை சிஎஸ்கே அணிக்காக கொடுப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நானும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெற்ற பின்புதான் ஐபிஎல் போட்டியில் பங்கேற்றேன்" என்றார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
"மருத்துவர் சாந்தா எனக்கு தாய் போன்றவர்"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
“ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது” - அமைச்சர் கே.பி அன்பழகன்
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி இன்று சந்திப்பு
தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?