[X] Close

”இனிமேல் பெரிய நட்சத்திரங்களின் சினிமா மட்டுமே தியேட்டர்களில் வரலாம்” : வெற்றிமாறன் ஆரூடம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஓடிடி சினிமா வெளியீடுகளின் தாக்கம் எப்படி உள்ளது என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்


Advertisement

image

இயக்குநர் வெற்றிமாறன் தனியார் வார இதழ் இணையத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் தற்போதைய தியேட்டர் சினிமா பற்றி பேசியுள்ள அவர் “ தியேட்டர் சினிமாவே இனி மாறும் நிலைவரலாம். பெரிய நட்சத்திரங்களின் சினிமா மட்டும்தான் தியேட்டர்களில் வர வாய்ப்புள்ளது. அதாவது தமிழில் முன்னணியில் உள்ள பத்து நடிகர்கள், அவர்களுக்கு படம் பண்ணும் 25 இயக்குநர்கள். இவர்களின் படங்கள் மட்டுமே தியேட்டரில் வரும் சூழல் உருவாகலாம். ஏனென்றால் இப்போதுள்ள சூழலில் தியேட்டர்களை திறந்தால்கூட 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்ப முடியும், அப்படியானால் தியேட்டரில் 200 சதவீதம் அதிக தொகைக்கு டிக்கெட் விற்றால்தான் கட்டுபடியாகும். இந்த அதிக தொகைக்கு டிக்கெட் வாங்கி இளைஞர்கள் மட்டுமே படம்பார்ப்பார்கள், அவர்கள் முன்னணி நடிகர்களின் படங்களை மட்டுமே பார்ப்பார்கள், அல்லது பெரிய கம்பெனிகளின் படங்களை பார்ப்பார்கள்.


Advertisement

அதனால் இனிமேல் பல புதியவகை சினிமா முயற்சிகளை பார்க்கப்போகிறோம். இப்போது நமக்கென்று சினிமா பற்றிய ஒரு டெம்பிளேட் இருக்கிறது அல்லவா? அது எல்லாம் மாற வாய்ப்புகள் உள்ளது. இனிவரும் காலங்களில் சிறப்பான கதை கொண்ட படங்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் இரண்டும் வரும், அதில் பெரிய பட்ஜெட் படங்கள் பெரும்பாலான தியேட்டர்களில் வெளியாகும், சின்னப்படங்களுக்கு சிறிய அளவிலான இடங்கள் கிடைக்கும். காக்காமுட்டை போன்ற சோதனை முயற்சிகளுக்கான படங்களுக்கும் வழக்கம்போல வாய்ப்புகள் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்

ஓடிடி பற்றி கூறும் அவர் “ இப்போது இருக்கும் சூழலில் இருந்து ஓடிடி நிச்சயமாக அடுத்த பெரியபடிதான். சூரரைப்போற்று ஓடிடியில் வெளியாக போகிறது, இதற்கான வரவேற்பு எப்படி இருக்கப்போகிறது என்று பார்க்கவேண்டும். தியேட்டர்கள் இல்லாததால் தயாரிப்பாளர்களுக்கு ஆயிரம் நெருக்கடிகள் இருக்கும் அதனால் இந்த முடிவை எடுக்கிறார்கள், இருந்தாலும் இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நான் பொதுவாக சில கொண்டாட்டத்திற்குரிய படங்களை தியேட்டரில் பார்க்க விரும்புகிறேன், எல்லா படத்தையும் அப்படியே பார்க்கவேண்டும் என்று இல்லை. சில நாட்களில் வீட்டில் சாமி கும்பிடுவோம், சில நாட்களில் கோவிலுக்கு செல்கிறோம் அதுபோலத்தான் தியேட்டர் அனுபவமும். முதலில் சினிமாவில் போட்ட காசை எடுக்கவேண்டும் என்று நினைப்பவன் நான். தியேட்டர்கள் இல்லாததால் தயாரிப்பாளர்கள் ஓடிடிக்கு செல்ல விரும்புகிறார்கள் என்றால் அதற்கும் தயாராகவே இருக்கிறேன்” என்கிறார்

தனது படம் உருவாக்கும் முறைப்பற்றி பேசியுள்ள வெற்றிமாறன் “ஸ்கிரிப்ட் இல்லாமல் ஸ்பாட்க்கு வந்தாலும் சிறப்பான படைப்பு வெளியாக காரணம் என்னோட டீம்தான். அவர்களுக்கு நான் முதலில் கதையின் சாராம்சத்தை சொல்லிடுவேன் அதுக்கு ஏத்த மாதியான சூழலை அவங்களே உருவாக்கிடுவாங்க. அவங்க என்னவிடவும் சிறப்பா வேலை செஞ்சிடுவாங்க, அந்த பெருமையெல்லாம் எனக்கு வந்துடுது. ஆனால் இதுபோல உருவாக்குவது சரியான முறை அல்ல. எழுதி, விவாதித்து உருவாக்க வேண்டும் அதுவே சரியான முறை” என்கிறார்.


Advertisement

 நன்றி: சினிமா விகடன்

loading...

Advertisement

Advertisement

Advertisement