பொறியியல் அரியர் தேர்வு ரத்து என்ற தமிழக அரசின் முடிவு தவறானது என ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுதே தெரிவித்துள்ளார்.
பொறியியல் மாணவர்களுக்கு அரியர்ஸ் தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா கூறிருந்தார். இதையடுத்து ஏஐசிடிஇ எழுதிய கடிதம் தமிழக அரசுக்கு வரவில்லை என்றும் அக்கடிதத்தை வெளியிட வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து தமிழக அரசின் அரியர் தேர்வு ரத்துக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏஐசிடிஇ அனுப்பிய கடிதம் வெளியானது.
இதனிடையே அரியர் தேர்வுகளை நடத்த அரசு தயாராக இருப்பதாக தகவல் வெளியானது. ஆனல் அரியர் தேர்வு தொடர்பாக அகில இந்திய தொழில் நுட்ப குழுமத்திற்கு எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், இதுகுறித்து புதியதலைமுறைக்கு பேட்டி அளித்த, ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுதே “அரியர் தேர்வு ரத்து என்ற தமிழக அரசின் முடிவு தவறானது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவுக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் தெரிவித்திருந்தேன். ஆனால் என்னிடம் இருந்து தமிழக அரசுக்கோ, அல்லது தமிழக அரசிடம் இருந்து எனக்கோ எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை.
அரியர் தேர்வு ரத்து குறித்து அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு விசாரணையின் போது ஏஐசிடிஇ தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும்” எனத் தெரிவித்தார்.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: உதய சூரியன் சின்னம் எத்தனை இடங்களில் போட்டி?
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற நடிகர் அஜித்! கொண்டாடி தீர்க்கும் நெட்டிசன்கள்
234 தொகுதி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்திய நாம் தமிழர் சீமான்!
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை - ஸ்டாலின் அறிவிப்பு
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!