ஜார்க்கண்ட்: ஆசிரமத்தில் புகுந்து பெண் சாமியாரை கூட்டு பாலியல்வன்கொடுமை செய்த 4 பேர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கோடா மாவட்டத்திலுள்ள ஆசிரமத்தில், ஒரு பெண் சாமியார் நான்கு நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார், இந்த குற்றவாளிகளில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement

image

குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் திங்கள்கிழமை இரவு பாத்வாரா கிராமத்திலுள்ள ஆசிரமத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தனர். அங்கிருந்த சாதுக்களை ஒரு அறையில் பூட்டிய அவர்கள், 38 வயது பெண் சாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தின்போது ஒரு பெண் சாமியார் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.


Advertisement

இதில் பாதிக்கப்பட்ட பெண் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்தார், அதன் பின்னர் காவல்துறையினர் குற்ற சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தொடங்கினர். இதுவரை குற்றவாளிகள் நான்குபேரில் முன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கோடாவைச் சேர்ந்த பாஜகவின் மக்களவை எம்.பி., நிஷிகாந்த் துபே, ஹேமந்த் சோரன் அரசாங்கத்தில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement