சினிமா பட பாணியில் ஓடும் லாரியில் தார்ப்பாயை கிழித்து கொள்ளையடித்த மர்மகும்பல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சினிமா பட பாணியில் ஓடும் லாரியின் தார்ப்பாயை கிழித்து துணி பண்டல்களை திருடிச்சென்ற கொள்ளையர்கள்.


Advertisement

image

ஈரோட்டில் இருந்து லாரியில் கேரளாவுக்கு ஜவுளி பார்சல்களை ஏற்றிக் கொண்டு பெருந்துறை விஜயமங்கலம் டோல்கேட்டில் இருந்து கருமத்தம்பட்டி டோல்கேட் வந்த பிறகு லாரியை டிரைவர் சோதனை செய்து பார்த்தார். அப்போது லாரியில் கட்டப்பட்டிருந்த தார்ப்பாயை நடுவில் கிழித்து உள்ளிருந்த 4 துணி பண்டல்களை எடுத்து சென்றுள்ளது தெரியவ்ந்தது.


Advertisement

லாரி ஓடிக் கொண்டிருக்கும் போதே திருடர்கள் சினிமா பட பாணியில் ஏதோ ஒரு வாகனத்தில் பின்புறமாக தொடர்ந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர் . ஈரோட்டில் இருந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு துணிபண்டல்களை ஏற்றிச்சென்ற லாரியின் டிரைவர் கருமத்தம்பட்டி டோல்கேட் அருகே வந்தபோது லாரியில் கட்டியிருந்த கயிறுகள் அவிழ்ந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

image

உடனே அவர் லாரியின் மேலேஏறி பார்த்தபோது தார்ப்பாய்  கிழிக்கப்பட்டு அதில் இருந்த பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது புகாரை ஏற்கமறுத்த காவல்துறையினர், அவினாசி காவல்நிலையத்தில் புகாரளிக்க அறிவுறுத்தியுள்ளனர். அதன் பின்னர் மாவட்ட காவல்கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின் பேரில் புகார் பெறப்பட்டு புகாரின் மீது கருமத்தம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement