புதிய தொழில்நுட்பத்தோடு கட்சியை அழைத்துச் செல்கிறார் மு.க.ஸ்டாலின் - கனிமொழி புகழாரம் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதிய தொழில்நுட்பத்தோடு கழகத்தை நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்லக்கூடிய தலைவர் மு.க.ஸ்டாலின் என பாராட்டு தெரிவித்துள்ளார் கனிமொழி.  


Advertisement

திமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அண்ணா அறிவாலயத்தில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக, க.பொன்முடி, ஆ.ராசா ஆகிய இருவரும் நியமனம் செய்யப்பட்டனர்.

image


Advertisement

இக்கூட்டத்தில் எம்.பி.கனிமொழி பேசியதாவது: 

பழமையை விட்டு விடாமல், புதிய தலைமுறையினருக்கு ஏற்ப, புதிய தொழில்நுட்பத்தோடு கழகத்தை நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்லக்கூடிய தலைவர் ஸ்டாலின்.

கருணாநிதிக்கு தோளோடுதோள் நின்ற துரைமுருகனுக்கு, பொதுச்செயலாளர் பதவியை தலைவர் கொடுத்துள்ளார். பொருளாளர் பதவியில் உள்ள டி.ஆர்.பாலு பொறுமையாக செயல்படுபவர்; தலைவர் கூறிவிட்டால் டெல்லியில் கூட சண்டை போடக்கூடியவர்.  துணைப்பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பொன்முடி, ஆ.ராசா ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள்'' என்றார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement