[X] Close

பா.ஜ.க.வுக்கு மக்கள் வாய்ப்பு அளிப்பார்களா? அமைச்சர் ஜெயக்குமார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என விருப்பமாக சிலர் பேசுகின்றனர். ஆனால் மக்கள் வாய்ப்பு அளிப்பார்களா என்பதை யோசிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.


Advertisement

தமிழக மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியதில் கூறியதாவது:

''ரிசர்வ் வங்கி வளர்ந்த மாவட்டத்துக்கு நிதி குறைப்பு செய்வதை ஏற்க முடியாது. பலர் கடன் வாங்கி திருப்பி செலுத்தி இருக்கிறார்கள். தமிழக மக்கள் கடனை திருப்பி செலுத்தி இருக்கிறார்கள். தமிழகத்தில் நிதி சுமை இருந்தாலும் மக்களுக்கான திட்டத்தை செய்து வருகிறோம்.


Advertisement

ஜி.எஸ்.டி பணம் 12 ஆயிரம் கோடி வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கேட்டிருக்கிறோம். மத்திய அரசுடன் அதிகாரத்தில் இருக்கும்போது திமுக எதையும் செய்யவில்லை. காவிரி தண்ணீரை மறுத்தபோது ஏன் திமுக ஆதரவை வாபஸ் பெறவில்லை? தமிழர்களின் உரிமையை பறிகொடுத்ததில் திமுக தான் முதலிடம். 

பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என விருப்பமாக சிலர் பேசுகின்றனர். ஆனால் மக்கள் வாய்ப்பு அளிப்பார்களா என்பதை யோசிக்க வேண்டும்'' என்று தெரிவித்தார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement