ரிலையன்ஸ் ரீடெயில் வெஞ்சர் லிமிட்டடில் சுமார் 7500 கோடி ரூபாயை அமெரிக்க நிறுவனமான சில்வர் லேக் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.
சில்லறை வர்த்தகத்தில் அண்மை காலமாக கவனம் செலுத்தி வருகிறது ரிலையன்ஸ் ரீடெயில் வெஞ்சர் லிமிடட்.
நாடு முழுவதும் சுமார் 12 ஆயிரம் கடைகளை கொண்டுள்ளது ரிலையன்ஸ் ரீடெயில். அதன் மூலம் சில்லறை வணிகத்தின் வளர்ந்து வரும் நிறுவனமாக ரிலையன்ஸ் திகழ்கிறது.
தற்போது ஆன்லைன் வர்த்தகத்திலும் ரிலையன்ஸ் கவனம் செலுத்தி வரும் நிலையில் சில்வர் லேக் நிறுவனத்தின் முதலீடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
‘சில்லறை வணிகத்தில் எங்களது முயற்சிக்கு சில்வர் லேக்கின் உறுதுணையை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறேன். இது இந்தியாவில் சில்லறை வணிகத்தை வலுப்படுத்த நாங்கள் கொண்டுள்ள தொலைநோக்கு திட்டத்திற்கு பெரிதும் உதவும்’ என தெரிவித்துள்ளார் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி.
நிச்சயமாக சில்லறை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் மாற்றத்தை உருவாக்கும் என தெரிவித்துள்ளார் சில்வர் லேக்கின் துணை சி.இ.ஓ ஏகன்.
சில்வர் லேக் நிறுவனம் ஜியோவில் இதற்கு முன்னதாக முதலீடு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!