6 மாதங்களுக்கு பின் திறக்கப்படுகிறது தாஜ்மஹால்... பார்வையாளர்களுக்கு புது கட்டுப்பாடு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா தொற்று காரணமாக 6 மாதங்களுக்கு மேலாகப் பூட்டப்பட்டிருந்த தாஜ்மஹால் பொதுமக்கள் பார்வையிட செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளது என இந்திய ஆக்ரா வட்டத்தின் கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் வசந்த் ஸ்வர்ன்கர் தெரிவித்துள்ளார்.


Advertisement

ஏ.எஸ்.ஐ பாதுகாப்பின்கீழ் இருக்கும் அனைத்து நினைவுச் சின்னங்களும், கோட்டைகளும் செப்டம்பர் 1-ஆம் தேதி திறக்கப்பட்டது. கட்டுப்பாட்டு மண்டங்களுக்குள் இருக்கும் தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டைகளை மட்டும் திறக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவு கொடுக்கவில்லை.

21-ஆம் தேதி திறக்கப்படவுள்ள தாஜ்மஹாலுக்கு வரும் பார்வையாளர்கள், சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்ற அரசின் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்கவேண்டும். டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும். ஏ.எஸ்.ஐ போன் செயலிமூலம் டிக்கெட்டுகளைப் பதிவுசெய்யலாம். வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள். ஆக்ரா கோட்டைக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் விடுமுறை நாளாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.


Advertisement

image

சாதாரண நாட்களில் ஒரு வருடத்தில் தாஜ்மஹாலுக்கு 70-80 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள். ஆக்ரா கோட்டைக்கு 30 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள். அதில் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்கள். இந்த ஆண்டு வழக்கமான வெளிநாட்டு போக்குவரத்து சேவை இல்லாததால் வெளிநாட்டவர்கள் வந்துபோகும் வாய்ப்புகள் குறையும் எனத் தெரிகிறது.

மார்ச் 17ஆம் தேதி மத்திய அரசின் கண்காணிப்பின்கீழ் இருக்கும் அனைத்து நினைவுச்சின்னங்களும் மூடப்பட்டது. 1965- 1971 வரையிலான இந்திய - பாகிஸ்தான் போருக்குப் பிறகு இப்போதுதான் கொரோனா காரணமாக தாஜ்மஹால் மூடப்பட்டது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement