சென்ட்ரல்- பரங்கிமலை இடையே மீண்டும் தொடங்கிய மெட்ரோ சேவை !

Chennai-Metro-Rail-commences-its-operation-between-Central-to-St-Thomas-Mount-today

கோயம்பேடு வழியாக சென்‌னை சென்ட்ரல்- பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கியது.


Advertisement

கொரோனா காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சென்னையில் மெட்ரோ ரயில்சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை முதல் மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.

image


Advertisement

முதற்கட்‌‌டமாக சென்னை விமானநிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. அதன் தொ‌டர்ச்சியாக, பரங்கிமலையிலிருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரல் வரை செல்லும் ரயில் சேவை இன்று தொடங்கியது.

முகக்கவசம், உடல் வெப்பநிலை போன்றவை பரிசோதிக்கப்பட்ட பின்னரே‌ பயணிகள் அனுமதிக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, மெட்ரோ சேவை தொடங்கப்பட்ட முதல்நாளில் சுமார் 5,000 பயணிகள் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement