ரியா போதைப்பொருட்களை வாங்கினார்; ஆனால் உட்கொள்ளவில்லை - டாப்ஸி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் போதைப்பொருள் வாங்கியது, வைத்திருந்தது மற்றும் விநியோகித்தது ஆகிய குற்றங்களுக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவால் நடிகை ரியா சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

முன்னதாக, ரியாவுக்கு ஆதரவாக பேசியிருந்த டாப்ஸி, முன்னணியில் இருக்கும் ஒருவருடன் இருந்தால் பணம் சுரண்டுபவராகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை என தெரிவித்ததுடன், நெட்டிசன்கள் விமர்சனத்திற்கு பதிலடியும் கொடுத்திருந்தார். இந்நிலையில், ரியா போதைப்பொருட்களை வாங்கியுள்ளார். ஆனால் அதை உட்கொள்ளவில்லை என நடிகை டாப்ஸி ட்வீட் செய்துள்ளார்.

தற்போது, “ரியா போதைப்பொருட்களை உட்கொள்ளவில்லை. சுஷாந்திற்காக வாங்கியுள்ளார் என்பது மட்டுமே உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே சுஷாந்த் உயிரோடு இருந்திருந்தால், அவரும் கைது செய்யப்பட்டிருப்பார். ஆனால், இப்போது சுஷாந்தை போதைப்பொருள் எடுக்க ரியா வற்புறுத்தி இருக்கலாம் அல்லது கஞ்சா வாங்கித்தரச்சொல்லி சுஷாந்த் ரியாவை வறுபுறுத்தி இருக்கலாம். இதுதான் நடந்திருக்கக்கூடும்’’ என என்.டி.டிவி செய்தியை சுட்டிக்காட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் டாப்ஸி.

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement