வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த யானை மரணம் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வனவிலங்கு வேட்டைக்காக வைக்கப்பட்ட அவுட்டுக்காயால் நாக்கு துண்டாடப்பட்டு கடந்த இரு மாதங்களாக காயத்துடன் உணவில்லாமல் கேரள-தமிழக வனப்பகுதிகளில் சுற்றிய மக்னா யானை கேரள மாநிலம் சோலையூரில் சாலையில் படுத்தவாறே மரணமடைந்தது.


Advertisement

கடந்த மாதம் 15ஆம் தேதி வாயில் காயத்தோடு மக்னா யானை ஒன்றை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். கேரளா - தமிழக வனப்பகுதியில் சுற்றிவந்த அந்த யானையை இருமாநில வனத்துறையினரும் கண்காணித்து வந்தனர். மயக்க மருந்து கொடுத்து யானையை பரிசோதித்தபோது, அதன் நாக்கு முழுவதுமாக துண்டாகி, வாய் சேதமடைந்திருப்பது தெரியவந்தது.தொடர்ந்து மருந்துகள் கொடுக்கப்பட்டாலும், யானையின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறப்பட்டது.

image


Advertisement

மேலும் வாயில் காயத்துடன் சுற்றி வரும் யானைக்கு சிகிச்சையளித்து உயிரை காப்பது சிரமம் என வனத்துறை மருத்துவர்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு தெரிவித்தனர். இந்நிலையில் காயத்துடன் உணவில்லாமல் சுற்றிய மக்னா யானை கேரள மாநிலம் சோலையூரில் சாலையில் படுத்தவாறே மரணமடைந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement