மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது ரஷ்யா உருவாக்கிய கொரோனா தடுப்பூசி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரஷ்யா உருவாக்கியுள்ள கொரோனாவுக்கு எதிரான ‘ஸ்பூட்னிக்-வி’ தடுப்பூசி பொது மக்கள் பயன்பாட்டிற்காக புழக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது ரஷ்ய சுகாதார அமைச்சகம்.


Advertisement

image

"ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் காமெலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையத்தால் கடந்த மாதம் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கான ‘காம்-கோவிட்-வெக் எனப்படும் ஸ்பூட்னிக்-வி’ தடுப்பூசிக்கான சோதனை ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்ததையடுத்து பொது மக்கள் பயன்பாட்டிற்காக முதல் கட்டமாக புழக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது” என அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது ரஷ்ய அரசு. 


Advertisement

ரஷ்ய சுகாதார அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் 11 அன்று கொரோனாவுக்கு எதிராக செயல்படும் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Courtesy: https://www.hindustantimes.com/world-news/russia-releases-first-batch-of-covid-19-vaccine-sputnik-v-into-public/story-3zo0QMVHlwEu0EGQgrjS5L.html

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement