[X] Close

5 பேரால் 2 பழங்குடியின சிறுமிகள் கூட்டுபாலியல் வன்கொடுமை.. விஷம் அருந்தியதில் ஒருவர் மரணம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் இரண்டு பழங்குடி சகோதரிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார், மற்றொரு சிறுமி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.


Advertisement

image

16 மற்றும் 14 வயதுடைய இருசகோதர சிறுமிகளும் செப்டம்பர் 4 ஆம் தேதி சில உள்ளூர் இளைஞர்களுடன் வெளியே சென்றதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்தனர். "அவர்கள் வழக்கம் போல் வெளியே சென்றதாக நாங்கள் நினைத்தோம், இருப்பினும் அவர்களை இரண்டு நாட்களாக காணவில்லை செப்டம்பர் 6 ஆம் தேதி திரும்பி வந்தனர்" என்று அவர்களது சகோதரர் கூறினார்.


Advertisement

அதன்பின் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், குடும்பத்தினர் அவர்களை உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சையளிக்க முடியாததால் அவர்களை வட வங்க மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். "மருத்துவமனையில், என் சகோதரிகள் அவர்கள் ஐந்து ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்கள் என்றும் அவர்கள் எப்படி தப்பித்து வீட்டிற்கு வந்தார்கள் என்றும் எங்களிடம் சொன்னார்கள். பின்னர் அவர்கள் வீட்டிற்கு வந்தபின் விஷம் உட்கொண்டார்கள் என்பதையும், அதனால்தான் அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டதையும் நாங்கள் அறிந்தோம்." என்று அச்சிறுமிகளின் சகோதரர் கூறினார்.

மூத்த சகோதரி திங்கள்கிழமை இரவு இறந்த நிலையில், இளையவரின் நிலைமை ஆபத்தானது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை கைது செய்துள்ளதாகவும், மற்ற இருவரையும் கைதுசெய்ய தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கடந்த மாதம், அதே பகுதியில் மற்றொரு 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார், பின்னர் அவரது உடல் ஒரு வீட்டின் செப்டிக் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளை காவல்துறை இன்னும் கைது செய்யவில்லை என்று உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement