15 ஆண்டுகளில் தற்போது இந்தியாவின் பணியமர்த்தல் உணர்வு மிகக் குறைவாக உள்ளது. வெறும் 3% நிறுவனங்கள் மட்டுமே அடுத்த மூன்று மாதங்களில் ஊழியர்களைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளன என்று மனிதவளக் குழு வேலைவாய்ப்பு அவுட்லுக்கின் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு இந்தியா முழுவதும் 813 நிறுவனங்களில் நடத்தப்பட்டது. ஏறக்குறைய 44% முதலாளிகள் அடுத்த ஒன்பது மாதங்களில்தான் கோவிட்-19 நெருக்கடிக்கு முந்தைய பணி நிலைமைக்குத் திரும்பலாம் என்று கூறியுள்ளனர். 42% முதலாளிகள் எப்போது பழைய நிலை திரும்பும் என தங்களுக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளில் தற்போதுதான் இந்தியா, இத்தகைய பலவீனமான பணியமர்த்தல் உணர்வைக் காண்கிறது. 2020 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் இந்திய முதலாளிகள் எச்சரிக்கையுடன் பணியமர்த்தல் திட்டங்களை தெரிவிக்கின்றனர்.
கணக்கெடுப்பின்படி, 7 சதவீத முதலாளிகள் சம்பளப்பட்டியலில் அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள், 3 சதவீதம் பேர் குறையும் என்று கணித்துள்ளனர், 54 சதவீதம் பேர் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்கவில்லை.
நடுத்தர அளவிலான மற்றும் பெரிய அளவிலான நிறுவனங்களை விடவும் சிறிய அளவிலான நிறுவனங்களில் வலுவான பணியமர்த்தல் வேகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் பணியமர்த்தல் வேகம் அதிகமாகவும் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளின் பணியமர்த்தல் விகிதம் குறைவாகவும் உள்ளது என்று கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: உதய சூரியன் சின்னம் எத்தனை இடங்களில் போட்டி?
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற நடிகர் அஜித்! கொண்டாடி தீர்க்கும் நெட்டிசன்கள்
234 தொகுதி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்திய நாம் தமிழர் சீமான்!
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை - ஸ்டாலின் அறிவிப்பு
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!