மேற்கு வங்கத்தின் நடியா மாவட்டத்தில் 20 வயதிற்குட்பட்ட இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளபோவதாக பேஸ்புக்கில் பதிவிட்டதை அடுத்து, பேஸ்புக் அதிகாரிகள் தகவல் சொல்லி காவல்துறையினர் அந்த தற்கொலையை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் கொல்கத்தா காவல்துறையின் சைபர்கிரைமை தொடர்புகொண்ட பேஸ்புக் அதிகாரிகள், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொள்வதாக பதிவிட்ட தகவலை தெரிவித்தனர். அதன்பிறகு விரைவான விசாரணை தொடங்கப்பட்டது, மேலும் அவரின் பேஸ்புக் சுயவிவரத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
"சமூக பொறியியலைப் பயன்படுத்தி, அந்த நபரின் இருப்பிடம் கண்டறியப்பட்டது. நாங்கள் அந்த இளைஞனின் தந்தையுடைய தொலைபேசி எண்ணையும் பெற்றோம், அவரைத் தொடர்பு கொண்டு நிலைமை குறித்து விளக்கினோம்.அவர் உடனே தனது மகனின் அறைக்கு விரைந்து சென்று அவரை மீட்டார், பிம்பூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்திருந்தோம்" என்று காவல்துறை அதிகாரி கூறினார்.
பிறகு உடனடியாக போலீசார் குழு ஒன்று பிம்பூர் காவல் நிலையத்திலிருந்து அந்த நபரின் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். விசாரணையில் அந்த இளைஞன் கடந்த மூன்று ஆண்டுகளாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிந்தது. அவர் ஏற்கனவே நான்கு சந்தர்ப்பங்களில் தற்கொலைக்கு முயன்றதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்