கதிராமங்கலம் மக்கள் போராட திட்டம்? சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கதிராமங்கலம் கிராம மக்கள் போராட்டம் நடத்தப்போவதாக எழுந்த தகவல் எதிரொலியாக தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை, பாஜக தலைமை அலுவலகங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில், ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அக்கிராம மக்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும், கதிராமங்கலத்தில், ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் எடுக்க எதிர்ப்பு தெரிவித்தும் அக்கிராம மக்கள் சென்னையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதன் எதிரொலியாக, தலைமைச்செயலகம், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகமான கமலாலய ஆகிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement