திருப்பத்தூரில் மசூதி கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் இஸ்மாயில்பேட்டையில் பழமை வாய்ந்த மசூதியின் மேல் தளத்தில் கடந்த ஒரு மாதமாக கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன.
இதில் இன்று திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை கிராமப் பகுதியை சேர்ந்த பாரதி(46) மற்றும் இஸ்மாயில் பேட்டை பகுதியைச் சேர்ந்த பிலால்(27) மற்றும் பாண்டியன் ஆகியோர் கட்டுமான பணிக்காக இரும்பு கம்பி ஒன்றை மேல் தளத்திற்கு எடுத்துச் சென்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பாரதி மற்றும் பிலால் ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும் பாண்டியன் படுகாயங்களுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த மின்சார வாரியம் மற்றும் திருப்பத்தூர் நகர போலீசார் உயிரிழந்த இருவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
சசிகலாவுக்கு லேசான மூச்சுத்திணறல்: தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்
#TopNews அமெரிக்க அதிபரான ஜோ பைடன் முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா வரை!
அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்
அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்
வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்க தயார்: விவசாயிகளிடம் மத்திய அரசு உறுதி