கோவையில் தனியார் நிறுவனம் சார்பில் வாடகை ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
கோவையில் இரு தனியார் நிறுவனங்கள் இணைந்து வாடகை ஹெலிகாப்டர் சேவையை அறிமுகம் செய்துள்ளது. கோவையிலிருந்து தனிப்பட்ட மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுக்கலாம். திருமண புகைப்படம் எடுப்பது, மலர் பொழிவு, பிறந்தநாள் கொண்டாட்டங்கள், திருமணநாள் கொண்டாட்டங்கள், ஓய்வு பயணங்கள், நகர சுற்றுப்பயணம், மருத்துவ அவசரநிலை போன்ற பல்வேறு திட்டங்களுக்காக இந்த தனியார் ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
என்.ஜி.ஜி.ஓ காலனி கங்கா ஹெலிபேட் சர்வீஸ் மையத்தில் ஹெலிகாப்டர் வாடகை சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒருவரின் சொந்த திட்டத்திற்கான தனியார் ஹெலிகாப்டரை செப்டம்பர் 2020 முதல் கோவையில் அரைமணி நேரம் முதல் அவர்களின் தேவைக்கேற்ப வாடகைக்கு எடுக்க முடியும். இதன் மூலம் நிலையாக கோவை மக்களுக்காக நகர சுற்றுப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் என மக்கள் ஹெலிகாப்டரில் நகர சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம்.
சேவைகளின் ஒரு பகுதியாக, புதிதாக திருமணமான ஒரு ஜோடி, ஈஷா யோகாவுக்கு பறந்து சென்று கோவை மாவட்டத்தின் வான்வழி காட்சியை ரசித்தனர். சுமார் 30 நிமிடங்கள் அவர்கள் வாடகை ஹெலிகாப்டரில் பறந்து மகிழ்ந்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மக்கள் அனைவரும் பாதுகாப்பான பயணத்தை விரும்பும் நிலையில், இந்த தனியார் ஹெலிகாப்டர் பயணத்திற்கு மிகவும் நெகிழ்வானதாக இருக்கும் என்றும், இந்த தனியார் ஹெலிகாப்டரின் இருக்கை திறன் நான்கு பயணிகள் மற்றும் ஒரு பைலட் கொண்டதாகும் என்று நிறுவனத்தினர் கூறுகின்றனர்.
Loading More post
சசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி
“என் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” -சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்
சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று - மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதுபோல கர்நாடக மருத்துவர்கள் நடித்தார்களா? - உண்மை இதுதான்
புனே சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!