கரூரில் தீவைத்து தற்கொலை செய்துகொண்ட மூதாட்டி.. போலீசார் விசாரணை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கரூரில் ரயில்வே மருத்துவமனை முன்பு 50 வயது மூதாட்டி திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அருகில் காப்பாற்ற யாரும் இல்லாததால் தீயில் கருகி உயிரிழந்தார்.


Advertisement

image

கரூர் ரயில்வே குடியிருப்பு வளாகத்தில் உள்ள ரயில்வே மருத்துவமனை அருகே இன்று பிற்பகலில் சுமார் 50 வயது மூதாட்டி நடந்து வந்து கொண்டிருந்தவர், திடீரென அவர் கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் கொண்டு வந்த கேனில் இருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.


Advertisement

image

உடல் முழுவரும் மளமளவென தீ பற்றி எரிந்தது. ரயில்வே குடியிருப்பு பகுதி என்பதால் அதிக அளவில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இதை பார்த்த சிலர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். கரூர் நகர காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று பார்த்த போது அந்த மூதாட்டி முற்றிலும் எரிந்து உயிரிழந்த நிலையில் கிடந்தார்.

image
போலீசார் அருகிலிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் உயிரிழந்த மூதாட்டி யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. இதையடுத்து, கரூர் காவல்நிலைய போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement