“யூஸ் பண்ண தெரியலையே”- திருடிய போனை உரிமையாளரிடமே திருப்பிக் கொடுத்த திருடன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள செல்போனைத் திருடிச் சென்ற நபர், பயன்படுத்தத் தெரியாததால் உரிமையாளரிடமே திருப்பிக் கொடுத்துள்ளார்.


Advertisement

மேற்கு வங்கம் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள ஜமால்பூரில் ஒரு நபர் இனிப்புக் கடைக்குச் சென்றபோது ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள தனது செல்போனை கடையிலேயே மறந்து விட்டு வந்திருக்கிறார். தனது போனைக் காணவில்லை என மீண்டும் இனிப்புக்கடைக்கு சென்று விசாரித்தபோது போன் கிடைக்கவில்லை. தனது நம்பரை தொடர்புகொள்ள முயற்சி செய்தபோது ஸ்விட்ச் ஆஃப் என வந்திருக்கிறது. எனவே போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்.

image


Advertisement

இரண்டு நாட்களுக்குப் பிறகு, மீண்டும் தனது நம்பரைத் தொடர்புகொள்ள முயற்சித்தபோது, அந்தப் பக்கத்தில் ஒருவர் எடுத்து பதிலளித்திருக்கிறார். அவருக்கு அந்த போனை பயன்படுத்தத் தெரியவில்லை என்றும், எனவே அதைத் திருப்பித் தர விரும்புவதாகவும் கூறியிருக்கிறார்.

இதைக் கேட்டவுடனே ஆச்சர்யப்பட்ட போனின் உரிமையாளர் அந்த நபரின் வீட்டுக்கே சென்று போலீஸாரின் உதவியுடன் தனது போனை மீட்டுள்ளார். மேலும் தனது செயலுக்காக உரிமையாளரிடம் வருத்தம் தெரிவித்திருக்கிறார். இந்த செயலுக்காக போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement