ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய்வழக்கு பதிவு செய்து போலீசார் நடவடிக்கை- சிபிஐ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய்யான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது சாத்தான்குளம் காவல் நிலையத்தின் பொறுப்பாளராக இருந்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் கவனமின்றி நடைபெற வாய்ப்பில்லை என சிபிஐ, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தகவல் தெரிவித்துள்ளது.


Advertisement

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், "சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருக்கிறேன். உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கை விசாரித்த நிலையில் தற்போது சிபிஐ காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கெனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்து விட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்து உள்ளது. எனக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தின் தலைமறைவாக மாட்டேன். நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன். ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். 

image


Advertisement

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "சம்பவம் நிகழ்ந்த அன்று கொரோனா பணியாக ஸ்ரீதர் வெளியே சென்றிருந்ததால், காவல் நிலையத்தில் இல்லை. ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்டதற்கும், ஸ்ரீதருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. சிபிஐ காவல் துறையினர் விசாரணையை மேற்கொள்வதற்கு முன்பாகவே, ஸ்ரீதர் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். அவருக்கு முதுகெலும்பு பிரச்னை இருப்பதால், உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்" என வாதிட்டார்.

சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த வழக்கு தொடர்பாக 45 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்ரீதரே காவல் நிலையத்தின் பொறுப்பில் இருந்துள்ளார். ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது ஸ்ரீதரின் கவனமின்றி நடைபெற வாய்ப்பில்லை. வழக்கு விசாரணை இன்னமும் முடிவடையாத நிலையில், தற்போது ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது" எனக் கூறியுள்ளார். இவற்றை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணை அதிகாரி, வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை குறிப்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பினை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement