கேரளாவில் ஓட்டுநர் ஒருவரின் திறமை இணையத்தில் வைரலாகியுள்ளது.
கவனக்குறைவு காரணமாக ஏற்படும் விபத்துகள் தொடர்பாக பல வீடியோக்கள் வைரலாகும். ஆனால் கேரளாவில் ஒரு ஓட்டுநரின் திறமையை பாராட்டும் விதமாக ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. பாலத்தின் அருகேயுள்ள சிறிய பக்கவாட்டில் தன்னுடைய பெரிய காரை கச்சிதமாக பார்க் செய்கிறார் அந்த ஓட்டுநர்.
சரியாக காரின் நீளத்தில் மட்டுமே அந்த பார்க்கில் ஏரியா இருக்கிறது. மிகவும் கவனமாக செமீ கணக்கில் காரை முன்னும் பின்னும் நகர்த்தி சரியாக நிறுத்துகிறார். அதேபோல் மீண்டும் காரினை எடுக்கிறார். அதிக பயிற்சி பெற்ற ஒருவரால்தான் இப்படியான சிறிய இடத்திலும் காரினை பார்க் செய்ய முடியும் என பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.
இது மிகவும் அபாயமான செயல்தான் என்றாலும் அந்த ஓட்டுநரின் திறமையை பாராட்ட வேண்டுமென்றும் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வீடியோவை பலரும் இணையத்தில் பகிர்ந்தும் வருகின்றனர்
‘அபாயம்தான்... ஆனால் திறமை...’ கேரளாவில் பாலத்தின் சிறிய பக்கவாட்டில் காரை ‘பார்க்’ செய்யும் ஓட்டுநர்! கவனம் ஈர்த்த வீடியோ#Kerala #Driver #ParkingSkills #ViralDriver pic.twitter.com/oVSjEJ1qx1
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) September 8, 2020Advertisement
Loading More post
சிறுத்தையை கொன்று கறி விருந்து: கேரளாவில் ஐந்து பேர் கைது!
தமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’