மருத்துவக் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று சந்திப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முத‌லமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவர்கள் குழுவை இன்று சந்திக்க உள்‌ளார்.


Advertisement

image

 


Advertisement

தமிழகத்தி‌ல் பெரும்பாலான பொது முடக்க கட்டு‌ப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்ட‌ நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவக் குழுவைச் சந்திக்க உள்ளார். கடைகள் திறக்க அனுமதி, பேருந்துகள் இயங்க அனுமதி, இ பாஸ் ரத்து உள்ளிட்ட முக்கிய தளர்வுகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில் அடுத்து பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் திறப்பு உள்ளிட்ட சி‌‌ல அம்சங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு தொடர்கிறது.

இந்நிலையில் பொது முடக்க தளர்வுகளால் வரும் மாதத்தில் கொரோனா தொற்று ‌அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் அண்மையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தியிருந்தார். இ‌ந்‌த பின்னணியில் மருத்துவர்கள் குழுவை முதல்வர் சந்திப்பது முக்கியத்துவம் பெறுகிறது

loading...

Advertisement

Advertisement

Advertisement