நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே பெண்ணிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த மத போதகரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரவேணு முடியகம்பை கிராம பகுதியில் கிறிஸ்துவ மத போதகராக இருப்பவர் அசோக் ஸ்டீபன். இவர் தனது சபைக்கு வரும் இளம் பெண்களிடம் செல்போனில் ஆபாசமாக பேசி வருவதாகவும் இது குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி வருவதாகவும் பெண்கள் சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும், இதுதொடர்பாக தர்ம அமைப்பை சேர்ந்த நீலகிரி மாவட்ட செயலாளர் ராம மூர்த்தி என்பவர் சம்மந்தப்பட்ட மத போதகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் அசோக் ஸ்டீபனிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அசோக் ஸ்டீபன் ஆபாசமாக பேசியதும், பலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் செல்போனில் பேசியதும் உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து அசோக் ஸ்டீபனை கோத்தகிரி போலீசார் கைது செய்து குன்னூர் மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர் படுத்தி குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர்.
Loading More post
சசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி
“என் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” -சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்
சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று - மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதுபோல கர்நாடக மருத்துவர்கள் நடித்தார்களா? - உண்மை இதுதான்
புனே சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!