[X] Close

தனியார் மருத்துவமனையின் 2வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை முயற்சி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதுக்கோட்டை அருகே தனியார் மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் வள்ளிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கீதா(27). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக்கூறப்படுகிறது. இதனால் மனநல சிகிச்சைக்காக புதுக்கோட்டை, அசோக் நகரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சங்கீதா திடீரென மருத்துவமனையின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து படுகாயமடைந்த அந்த பெண்ணை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கணேஷ் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

சின்னமனூர் அருகே விஷம் குடித்து தம்பதி தற்கொலை முயற்சி - கணவர் பலி ||  Chinnamanur near Couple attempts suicide by drinking poison Husband killed

மாடியில் இருந்து குதித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் மனநல சிகிச்சைக்காக அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து குதித்ததாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement