தமிழகத்தை சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிப்பு : ஜிஎஸ்டி உதவி ஆணையர் புகார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிப்பு செய்வதாக ஜிஎஸ்டி அலுவலக உதவி ஆணையர் பாலமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.


Advertisement

இதுகுறித்து மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரிய தலைவருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்தி தெரியாத தனக்கு இந்தி பிரிவில் உதவி ஆணையர் பொறுப்பு வழங்கியதில் துளியும் விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தி பிரிவில் உள்ள 3 அதிகாரிகளும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் என்றும், அவர்களுக்கும் இந்தி தெரியாது என்றும் கூறியுள்ளார். அலுவல் கடிதங்களும், குறிப்புகளும் இந்தியில் இருப்பதால் புரியாமல் கையெழுத்திடும் நிலை ஏற்படுவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியை மத்திய அரசு திணிப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அதிகாரி ஒருவரே இப்படியான புகாரினை அளித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement