ஆர்டிஐ மூலம் தகவல்களை வழங்க மறுத்தால் சட்டரீதியான நடவடிக்கை: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்க மறுத்தால் சட்டரீதியான பிரச்சனையை சந்திக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.


Advertisement

image

திருச்சியை சேர்ந்த ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் முத்தையா  தகவல் உரிமை சட்டத்தின் கீழ், கடந்த 2006, 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் எத்தனை அரசு பணியிடங்கள் காலியாக இருந்தன? அதில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எத்தனை பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது ? மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேருக்கு அரசு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பன உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும் என கேள்விகளுடன் விண்ணப்பித்திருந்தார்.


Advertisement

இந்த தகவல்களை மனுதாரருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வழங்க மறுத்த நிலையில், அவற்றை வழங்க வேண்டும் என மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த தகவல்களை வெளியிட்டால் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படும் எனக்கூறி, இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டியும், சட்டத்தில் விலக்கு உள்ளதாக கூறியும் தகவல்களை வழங்க மறுக்கும் அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், இது போன்ற  தகவல்களை வழங்க மறுக்கும் பொது தகவல் அதிகாரிகள் பதவியில் நீடிக்க தகுதி இல்லை என  தெரிவித்த நீதிபதி,  மனுதாரர் கோரிய தகவல்களை ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டார் .

தகவல்களை வழங்க மறுத்த பொது தகவல் அதிகாரிகள், இன்னும் பதவியில் நீடிக்கிறார்களா? இல்லையா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை அக்டோபர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார். தகவல்களை வழங்க மறுத்தால் சட்டரீதியான பிரச்சனையை சந்திக்க நேரிடும் என அனைத்துத்துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள், அரசு அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement