ஆர்யாவின் "சல்பேட்டா" படப்பிடிப்பு செப். 15 இல் தொடக்கம் ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் "சல்பேட்டா" திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் பா.இரஞ்சித். இவர் இயக்கிய அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. மேலும் இவர் திரைப்பட தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது பா.இரஞ்சித் ஆர்யா நடிப்பில் சல்பேட்டா என்கிற படத்தை இயக்கவுள்ளார்.

image


Advertisement

குத்துச்சண்டை பின்னணியில் உருவாகவுள்ள இந்தத் திரைப்படத்துக்கு ஆர்யா கடுமையான உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடம்பை கட்டுமஸ்தாக ஏற்றியுள்ளார். அவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் அண்மையில் வைரலானது. இந்நிலையில் பொது முடக்கம் காரணமாக சல்பேட்டா திரைப்படம் தொடங்க தாமதமானது.

image

இப்போது தமிழக அரசு சில நிபந்தனைகளுடன் திரைப்படப் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதியளித்துள்ளது. இதனையடுத்து செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல், சல்பேட்டா படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதாகவும் முழுக்க முழுக்க சென்னையில் படமாக்கப்படவுள்ளதாகம் கூறப்படுகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement