சிறுமியை மிரட்டி பாலியல்வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர்கள்: காதலனால் நேர்ந்த கொடூரம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சமயபுரம் அருகே 3 பேர் 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

சமயபுரம் அருகே ஈச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கோவிந்தராஜ். இவரது 16 வயது மகள் தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். அப்போது அதேப் பள்ளியில் 12வது படித்த மருதுபாண்டி என்பவரும் அந்த சிறுமியும் காதலித்ததாக தெரிகிறது. திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருக்கமாக இருந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து மருதுபாண்டியன் நண்பர்களான விமல்குமார் மற்றும் தினேஷ் ஆகியோர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மின்னம்பலம்:பொள்ளாச்சியில் மீண்டும் பாலியல் வன்கொடுமை!


Advertisement

இந்நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக வயிறு வலிப்பதாக சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவ பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியிடம் விசாரணை செய்தபோது அவர் நடந்ததை கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமி லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மருதூரைச் சேர்ந்த 21 வயதான மருதுபாண்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள அல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான விமல்குமார், லால்குடியைச் சேர்ந்த தினேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement