சென்னை: குப்பை லாரி மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் குப்பை லாரி மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

சென்னை புரசைவாக்கம் சுந்தரம்பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சாய்பிரசாத்(19). இவர் தனியார் கல்லூரியில் 2-ம்ஆண்டு பிசிஏ படித்து வந்தார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் இன்று காலை சென்று கொண்டிருந்தார். புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் அவர் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த மாநகராட்சி குப்பை லாரி சாய் பிரசாத்தின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

மர்மபொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு


Advertisement

இதில் தலையிலும் இடுப்பிலும் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு சாய் பிரசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.

வங்கி, ஏடிஎம்களில் பிராந்தியமொழிகளை தடுத்து நிறுத்தும் நோக்கம் இல்லை: நிர்மலா சீதாராமன்

loading...

Advertisement

Advertisement

Advertisement