வங்கிகளில் அல்லது ஏடிஎம்களில் பிராந்திய மொழிகள் உபயோகிப்பதை தடுத்து நிறுத்துமாறு எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்” மத்திய அரசின் நிதி அமைச்சரகத்திலிருந்து வங்கிகளில் அல்லது ஏடிஎம்களில் பிராந்திய மொழி உபயோகிப்பதை தடுத்து நிறுத்துமாறு எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. நாங்கள் பிராந்திய மொழிகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறோம். எனவே அவ்வாறு பிறப்பிக்கும் எண்ணமோ/நோக்கமோ இல்லை. எங்கேனும் இடையூறு ஏற்பட்டால் தெரிவிக்கவும். உடனே நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா “வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் பிராந்திய மொழிகள் அகற்றப்படுவதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம், உடனடியாக நிலைமையை மீட்டெடுக்க வலியுறுத்துகிறோம்” என்று டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் நிர்மலா சீதாராமன் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
Loading More post
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
நெல்லை: ஆஃப் ஆன மைக்; ராகுல் காந்தியின் பேச்சால் கூட்டத்தில் சிரிப்பலை
வைரல் புகைப்படம்: ராகுல் காந்தியிடம் ஃபிட்னெஸ் டிப்ஸ் கேட்கும் நெட்டிசன்கள்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி