[X] Close

திமுக கட்சி வண்ணத்தில் கமல் பெயர் - திருமங்கலத்தில் பரபரப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகரும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் பிறந்த நாள், வருகிற நவம்பர் மாதம் கொண்டாடப்படும் நிலையில், திருமங்கலத்தில் அவரது பெயர் திமுக கட்சி வண்ணத்தால் எழுதப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

 தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலுக்காக அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது மக்கள் நீதி மையம் தமிழகத்தில் உள்ள 40 தொகுதியில் ,காஞ்சிபுரம், பெரம்பலூர் தவிர்த்து 38 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகள் பெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கட்சிகள் மக்கள் நீதி மையத்தை கூட்டணிக்கு அழைத்த நிலையில், கூட்டணிகளை தவிர்க்கும் பொருட்டு மக்கள் நீதி மையம் களமிறங்காமல் இருந்தது.

image


Advertisement

எதிர்வரும் 2021 சட்டமன்ற பொதுதேர்தலில் கமல் கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிட வாய்ப்புகள் உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது, இந்நிலையில், மதுரை திருமங்கலத்தில் மக்கள் நீதி மைய நிர்வாகிகள் சார்பில், நவம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்படும் கமலின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்க எழுதிய சுவர் சித்திரத்தில் கறுப்பு, சிவப்பு நிறத்தில் திமுக கட்சி வண்ணத்தில் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.

loading...

Advertisement

Advertisement

Advertisement