பாரத ஸ்டேட் வங்கியில் விரைவில் விருப்ப ஓய்வு? !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாரத ஸ்டேட் வங்கி மிகப்பெரிய அளவில் விருப்ப ஓய்வு திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

இத்திட்டத்திற்கான நடைமுறைகள் உருவாக்கப்பட்டு இயக்குநர் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. செலவுகளை குறைக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 25 ஆண்டிற்கு மேல் பணியாற்றியவர்கள் அல்லது 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இத்திட்டம் பொருந்தும் என கூறப்படுகிறது.

image


Advertisement

விருப்ப ஓய்வு திட்டத்திற்கு விண்ணப்பிப்பது இந்தாண்டு டிசம்பரில் தொடங்கி வரும் பிப்ரவரி வரை நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. விருப்ப ஓய்வு பெ‌ற தகுதியுள்ளவர்கள் பட்டியலில் 30 ஆயிரம் பேர் உள்ள நிலையில் இதில் 30% பேர் அத்திட்டத்தை தேர்வு செய்தாலே வங்கிக்கு நிகர அளவில் ஆயிரத்து 662 கோடி ரூபாய் மீதமாகும் எனத் தெரிகிறது

loading...

Advertisement

Advertisement

Advertisement