நாமக்கல்லில் வேலையின்றி தவித்து வந்த கூலித் தொழிலாளி கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (48). இவரது மனைவி சாந்தி (42). இந்த தம்பதிக்கு 11 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். தங்கராஜ் ஈரோட்டில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் துணி மடிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த நான்கு மாதங்களாக வேலை இழந்து தவித்த தங்கராஜ், நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியதாக தெரிய வருகிறது.
கொரோனா காலமென்பதால் பணத்தை திருப்பி செலுத்த முடியாத நிலையில், நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கராஜை பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. கடன் கட்ட முடியாத சூழ்நிலையில் மன உளைச்சலில் இருந்த தங்கராஜ், நேற்று மாலை முதலே திடீரென்று மாயமாகிவிட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், இன்று நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகிலுள்ள ஓடப்பள்ளி கதவணை பகுதியில் காலியாக உள்ள ஒரு கடையில் வயர் மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து அங்கு விரைந்து வந்த பள்ளிபாளையம் போலீசார், தங்கராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தங்கராஜ் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்தது மட்டுமின்றி, பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தால் இ- பாஸ் கட்டாயம்
5 மாதங்கள்... 68 கட்டங்கள் : சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் - 1951
கமல் நிதானமாக கற்றுக்கொள்வார்: பொன்ராஜ் நம்பிக்கை
“வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - பரப்புரையில் பிரதமர் மோடி
6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!