உ.பி: நிலப்பிரச்சனையில் முன்னாள் எம்எல்ஏ அடித்துக் கொலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உத்தரபிரதேச லக்கிம்பூர் கெரியில் முன்னாள் எம்.எல்.ஏ நிர்வேந்திரகுமார் மிஸ்ரா நிலத்தகராறு அடித்துக்கொல்லப்பட்டார். இவர் பாலியா தொகுதியில் மூன்றுமுறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார்.


Advertisement

image

நிலத்தகராறு தொடர்பாக ட்ரிகோலியா பஸ் ஸ்டாண்ட் அருகே மோதல் வெடித்தது. அப்போது குற்றவாளிகள் லத்திகளுடன் வந்து நிர்வேந்திர குமாரை அடித்து வீழ்த்திய நிலையில், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார்.


Advertisement

"நில தகராறு தொடர்பாக மோதல் ஏற்பட்டது, அதனால் நிலைமை மோசமடைந்தது, இதனால் முன்னாள் எம்.எல்.ஏ காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்" என்று போலீஸ் சூப்பிரண்டு  தெரிவித்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, மிஸ்ராவின் மரணம் தொடர்பாக உள்ளூர்வாசிகள் சம்பூர்நகர் காவல் நிலையத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்கள்.

”யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் கீழ் மாநிலத்தில் பாதுகாப்பு மோசமடைந்து கொண்டே இருக்கிறது என்று உத்தரபிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் அஜய்குமார் லல்லு தெரிவித்தார். உ.பி. எம்.எல்.ஏ சமாஜ்வாதி தலைவர் ஓம்பிரகாஷ் ராஜ்பர் கூறுகையில் ”உ.பி. அரசு குற்றவாளிகளிடம் சரணடைந்துள்ளது, மாநிலத்தில் ஒரு கொலை சம்பவம் நடக்காத ஒரு நாள் இல்லை” என்று தெரிவித்துள்ளார். மற்றும் பல கட்சி தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement