திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர்... மதுரையில் சோகம்...

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரை அவனியாபுரம் காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

image
மதுரை அவனியாபுரம் காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தவர் முத்துப்பாண்டி (29) என்பவர் வீட்டில் இருந்து நேற்று பணிக்கு செல்லும் போது திடீரென மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் முத்துபாண்டியின் முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் கண்விழிக்காததால் மருத்துவமனையில் சேர்த்தனர்.

image
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரின் உடலுக்கு அவனியாபுரம் காவல்ஆய்வாளர் பெத்துராஜ் தலைமையில் நடந்த அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இவர் சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பரிசோதனை எடுத்த நிலையில் முடிவுகள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement