வீடுகளின் கதவுகளில் குறியீடுகளை வரைந்த மர்மகும்பல்.. கொள்ளை அச்சத்தில் நெல்லை மக்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நெல்லை மாநகர விரிவாக்க பகுதிகளில் வீடுகளின் கதவுகளில் குறியீடுகளை வரைந்து கொள்ளையடிக்கும் மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Advertisement

நெல்லை மாநகரம் கடந்த இருபது வருடங்களில் அதிகரித்துள்ள மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக புறநகர் பகுதிகளில் புதிய குடியிருப்புகள் புதிய காலனிகள், புதிதாக நகர்கள் உருவாகி உள்ளன. இவ்வாறு பெருக்கமான வீடுகள் மாநகரின் விரிவாக பகுதியாக மாறி இருந்தாலும் வீடுகள் ஒன்றுக்கொன்று அதிக இடைவெளியுடன் அமைந்துள்ளன.

image


Advertisement

இதன் காரணமாக பாதுகாப்பு குறைபாடு என்பது இந்தப் பகுதிகளில் கண்கூடாக காணப்படுகிறது. ஒரு வீட்டிற்கும், மற்றொரு வீட்டிற்கும் எந்தஒரு தொடர்பும் இருக்காது. கிராமப்புறங்களில் புதிதாக ஒருநபர் ஊருக்குள் நுழைந்தால் விசாரிக்கப்படுவார். ஆனால் நகரங்களில் அதுவும் விரிவாக்க பகுதிகளில் விசாரணை என்பது பெரிதாக இருக்காது.

மேலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு கொள்ளையடிக்கும் நோக்குடன் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக நெல்லை மாநகரின் விரிவாக்க பகுதிகளில் உள்ள வீடுகளின் வாசல் கதவுகளில் பிரெஞ்சு மொழியில் கொள்ளையடிப்பதற்கான குறியீடுகளை வரைந்து சென்றுள்ளனர். இதனை அறிந்த அப்பகுதியினர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

image


Advertisement

நெல்லை மாவட்டம் வி.எம்.சத்திரம் மற்றும் ஆரோக்கியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில வீடுகளின் வாசல்களில் கொள்ளையர்கள் பயன்படுத்தும் குறியீடுகள் எண்களை பயன்படுத்தி வீட்டின் கதவுகளில் வரையப்பட்டுள்ளன. குறிப்பாக னஅம என்று எழுதப்பட்டும், வட்டத்திற்குள் பெருக்கல் குறி இட்டும் குறியீடுகளை எண்களைக் கொண்டு கதவில் வரைந்து சென்றுள்ளனர்.

எளிதில் கவனிக்க முடியாத இந்த குறியீடுகளை வீட்டின் கதவை திறக்க வீட்டார் தாமதித்த நிலையில், காத்திருந்தவர்கள் கதவை கவனித்ததில் அதில் உள்ள குறியீடுகளை புரிந்துகொண்ட வீட்டின் உரிமையாளர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்கள். காவல்துறை அதிகாரிகள் விசாரித்ததில் இந்தக் குறியீடு பிரெஞ்சு மொழியை பயன்படுத்தி வரையப் பட்டுள்ளது என்பதை முதற்கட்டமாக கண்டறிந்துள்ளார்கள்.

image

அதன்படி Dimanche matron அதாவது ஞாயிறு  அதிகாலை k for cash என்ற வார்த்தைகளின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருடுவதற்கு திட்டம் என குறியீடுகளை வரைந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்த வாக்கியங்கள் குறியீடுகள் அனைத்தும் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி கதவில் வரையப்பட்டுள்ளன.

அதன்படி பார்க்கும்போது வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது இன்று இந்த கொள்ளை சம்பவத்திற்கான முயற்சி நடக்கலாம் என்ற அடிப்படையில் அவை எழுதப்பட்டுள்ளது என்பதை காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். இந்த அடிப்படையில் மாநகர காவல்துறை குற்றவியல் பிரிவில் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் இரவு நேர பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

image

இரவு நேரங்களில் காவல்துறை ரோந்து வாகனங்கள் இந்தபகுதி முழுக்க சுற்றி வருகின்றன. இருந்தும் அந்த குடியிருப்பு பகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதிக இடைவெளிகளில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன எந்த ஒரு வீட்டிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை. சிசிடிவி கேமராக்கள் வீடுகளிலும் சாலையின் முக்கிய பகுதிகளிலும் பொருத்துமாறு காவல்துறையினர் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement