நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துச் சேவை: ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுரை !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் நாளை முதல் மாவட்டங்களுக்கிடையில் பேருந்துகள் இயக்கப்படவுள்ள நிலையில் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் அறிவுரைகளை வழங்கியுள்ளது.


Advertisement

கொரோனா பொதுமுடக்கத்தால் மாவட்டங்களுக்கிடையில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்து போக்குவரத்து நாளை முதல் மீண்டும் தொடங்கப்படவுள்ளது. பல மாதங்களுக்கு பிறகு தொலைதூர பேருந்துகள் இயக்கப்படவுள்ளதால் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுரை வழங்கி அனைத்து கிளை மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

image


Advertisement

அதில், 5 மாதங்களாக இரவு நேரத்தில் ஓய்வில் இருந்ததால், இரவு நேரங்களில் கூடுதல் விழிப்புணர்வோடு பேருந்துகளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கண்டிப்பாக ஓட்டுநர்களுக்கு அருகே அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடத்துநர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், வழித்தடங்களில் இருசக்கர வாகனங்கள் அதிகமாக இயங்குவதால், கவனமாக பேருந்துகளை இயக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

image

சாலையின் நடுவே வாகன தணிக்கைக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர எல்லைக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ளதையும் கவனத்தில்கொள்ள ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கும் கவுன்சிலிங் வழங்கிய பின் பணிக்கு அனுப்பவும் கிளைமேலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement