கொரோனா பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஆம்புலன்ஸ் டிரைவர்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.


Advertisement

கேரள மாநிலம் கயம்குளம் பகுதியை சேர்ந்தவர் நவ்ஃபால். இவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கொரோனா நோயாளிகளை, அதற்கான சிகிச்சை மையங்களில் கொண்டு சேர்க்கும் பணியில் இவர் அமர்த்தபட்டிருந்தார். இந்நிலையில் நேற்று கொரோனா பாதித்த இரண்டு பெண்களை இவர் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு கொண்டு சென்றுள்ளார். அதில் ஒரு பெண்ணை கொழஞ்சேரி மருத்துவமனையில் இறக்கிவிட்டுள்ளார்.

image


Advertisement

பின்னர் 20 வயது மதிக்கத்தக்க பெண்ணை அழைத்துக்கொண்டு பந்தலம் சென்றுள்ளார். செல்லும்வழியில் அருண்மலை என்ற இடத்தில் யாருமில்லாத வெறிச்சோடிய சாலையில் ஆம்புலன்ஸை நிறுத்தியுள்ளார். பின்னர் கொரோனா நோயாளியாக ஆம்புலன்ஸில் இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையடுத்து அப்பெண்ணை கொரோனா சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு சென்றதும் மருத்துவமனை நிர்வாகத்திடம் அப்பெண் புகாரளித்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் வந்து ஓட்டுநர் நவ்ஃபாலை கைது செய்தனர்.

தீவிபத்தில் சிக்கிய சரக்குக் கப்பல் : கச்சா எண்ணெய் டேங்கர் வெடித்தால் பேரழிவு..!

loading...

Advertisement

Advertisement

Advertisement