நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளித்த போது சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் குடும்பத்துடன் சுழலில் சிக்கிய நிலையில் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டனர். தண்ணீரில் மூழ்கி ஆசிரியரை தீயணைப்புத் துறையினர் தேடிவருகின்றனர்.
சென்னை செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன். இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளிகள் விடுமுறை காரணமாக நாராயணன் தனது மனைவி அனுஷயா மகன்கள் ஹரிஸ், ராம்சங்கர் என குடும்பத்துடன் நெல்லை பாளையங்கோட்டை பொதிகை நகர் அடுத்துள்ள ராமச்சந்திரன் நகரில் வசிக்கும் சகோதரர் ரவி வீட்டிற்கு வந்துள்ளார்.
ரவி பர்கிட்மாநகர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் . இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் நாராயணன் மற்றும் அவரது சகோதரர் ரவி ஆகியோர் குடும்பத்துடன் பொட்டல் பகுதி தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர், அப்போது அவர்கள் ஆழமான பகுதிக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
இதில் நாராயணன், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஆற்றின் சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கியுள்ளனர். உயிருக்கு போராடியவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அனுஷ்யா, ஹரிஸ், ராம்சங்கர் ஆகியோரை உயிருடன் மீட்டனர். ஆனால், நாராயணன் தண்ணீரில் மூழ்கிவிட்டார், அவரை மீட்க முடியாத நிலையில் இதுகுறித்து பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், படகு உதவியுடன் தீவிரமாக நாராயணனை தேடி வருகின்றனர். மேலும் தண்ணீரில் மூழ்கி மீட்கப்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்ட ராம்சங்கர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் .
இதனிடையே தச்சநல்லூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட சேந்திமங்கலம் ஆற்றுப் பகுதியில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஒருவரின் உடல் கரை ஒதுங்கி உள்ளதால் உடலை மீட்டு தச்சநல்லூர் காவல்துறையினர் இவர் யார் .எந்த பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?