விழுந்த மரத்தின் அடியில் 4 நாள்கள் சிக்கிய நபர்.. மழை நீரை குடித்து உயிர் பிழைத்த அதிசயம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்காவில் விழுந்த மரத்தின் கீழே வெளியே வர முடியாமல் சிக்கிய முதியவர் ஒருவர் நான்கு நாள்களாக மழைநீர், வியர்வை ஆகியவற்றை குடித்து உயிர் பிழைத்துள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது.


Advertisement

அமெரிக்காவின் மினிசோட்டா மாகாணத்தின் ரெட்வுட் பகுதியில் வசித்து வருபவர் 59 வயதான ஜோனதன் கெப்லத்தா. இவர் பல ஆண்டுகளாக மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் ஆகஸ்ட் 27 ஆம் தேதியில் ரெட்வுட் காட்டுப்பகுதியில் மரம் வெட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது ஒரு மரத்தை வெட்டிக்கொண்டு இருந்தபோது திடீரென அம்மரம் பாதியாக முறிந்து விழுந்துள்ளது. இதில் மரத்தின் அடியில் ஜானதன் சிக்கிக்கொண்டுள்ளார். அவரால் அதன்பின்பு ஒன்னும் செய்ய முடியவில்லை.

image


Advertisement

இதனால் ஜானதனை அவரது குடும்பத்தினர் தேடியுள்ளனர். இதனையடுத்து போலீஸில் புகார் அளித்துனர். இதனையடுத்து போலீஸார் ஜானதனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பின்பு ரெட்வுட் வனப்பகுதியில் போலீஸார் ஜானதனை தேடியுள்ளனர். அங்கு மரத்தின் கீழே சிக்கியிருந்த ஜானதனை பத்திரமாக மீட்டனர். பின்பு அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மரம் விழுந்து 4 நாள்கள் கழித்து மீட்கப்பட்டதால் மிகவும் சோர்வுடன் காணப்பட்டுள்ளார்.

image

இது குறித்து ரெட்வுட் காவல்துறை அதிகாரி கூறும்போது "நான் காவல் அதிகாரியாக 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். ஆனால் இதுபோன்ற காட்சியை நான் கண்டதில்லை. நான் அவர் இறந்துவிட்டார் என நினைத்தேன். ஆனால் அதிசயமாக அவர் உயிருடன் இருந்தார். 100 மணி நேரமாக அவர் சுய நினைவுடன் இருந்திருக்கிறார். மழை நீர், வியர்வை, அருகில் இருந்த இலைகளை சாப்பிட்டிருக்கிறார். இது அதிசய நிகழ்வு" என்றார்.


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement