"ராமநாதபுரத்திற்கு நன்றி - நிறையக் கற்றுக்கொண்டேன்" - வருண்குமார் ஐபிஎஸ் நெகிழ்ச்சி ட்வீட்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இராமநாதபுரம் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த வருண்குமார் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். 


Advertisement

அண்மையில் இராமநாதபுரம் ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் உட்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த நிலையில், சென்னை தானியங்கி மற்றும் கண்னி மயமாக்கல் பிரிவு எஸ்.பி.யாக வருண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து வருண் குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது “ மிக்க நன்றி ராமநாதபுரம். நான் நிறைய கற்றுக்கொண்டேன். காவல் துறையில், என் வாழ்க்கையின் சிறந்த நாட்கள் இவை. எனது குடும்பம் இங்கு இருப்பதால் சென்னைக்கு திரும்பி வருவதில் மகிழ்ச்சி. அனைத்து நலம் விரும்பிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி. இணைந்திருங்கள், தொடர்பில் இருங்கள்.” என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். 

ராமநாதபுரத்தில் சமீபத்தில் நடந்த கொலை ஒன்றில் ஏற்பட்ட அரசியல் அழுத்தங்களால் வருண்குமார் இடமாற்றம் என சமூக வலைத்தளங்களில் விமர்சனம் முன் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

loading...

Advertisement

Advertisement

Advertisement