ஒடிசா மாநிலத்தில் உள்ள கேந்திரபாரா நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினரும், பிஜு ஜனதா தள கட்சியின் துணைத் தலைவரும், நடிகருமான அனுபவ் மொஹந்தி மீது அவரது மனைவியும், நடிகையுமான வர்ஷா பிரியதர்ஷினி ‘என் கணவர் என்னை டார்ச்சர் செய்கிறார்’ என சொல்லி கட்டாக் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இருவரும் இணைந்து நிறைய படங்களில் நடித்துள்ளனர். கடந்த 2014-இல் மண வாழ்க்கையில் இணைந்தனர்.
‘அவர் ஒரு குடிகாரர். பெண் பித்து பிடித்தவர். குடித்துவிட்டு இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவார். சமயங்களில் அடிக்கவும் செய்வார். 2019 தேர்தல் வெற்றிக்கு பிறகு நாளுக்கு நாள் அவர் எனக்கு டார்ச்சர் கொடுப்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவரது குடும்பத்தினரும் இதற்கு உடந்தையாக உள்ளனர்.
கொரோனா ஊரடங்கின்போது அவரோடு என்னையும் டெல்லிக்கு அழைத்து செல்லுமாறு நான் சொன்ன போது கூடு அதை கேட்டும் கேட்காதது போல என்னை கட்டாக்கில் உள்ள மாமியார் வீட்டிலேயே இருக்க செய்தார்.
கடந்த ஜூன் மாதம் கட்டாக் திரும்பியவர் இரண்டு மணி நேரம் மிக இழிவாக பேசிவிட்டு விவாகரத்து கேட்டு வறுபுறுத்தினார். நான் அதற்கு சம்மதிக்காவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் என்னை மிரட்டினார். அதோடு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எனக்கு டார்ச்சர் கொடுக்கிறார்’ என தெரிவித்துள்ளார் பிரியதர்ஷினி.
மேலும் திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருக்கும் தனக்கு 15 கோடி ரூபாய் இழப்பீடாகவும், வீட்டு வாடகை உட்பட இதர செலவுகளுக்கு மாதந்தோறும் எழுபதாயிரம் ரூபாயும் வேண்டுமென அந்த மனுவில் பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.
Loading More post
''குளிர்காலம் முடிவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்'': பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்
நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்!
அரசு போக்குவரத்து ஊழியர்கள் 3ஆவது நாளாக வேலை நிறுத்தம்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!
'அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு எப்போது? எதிர்பார்ப்பு என்ன?': கிஷன் ரெட்டி சிறப்பு பேட்டி
இன்று தமிழகம் வரும் ராகுல்காந்தி: தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'