மதுரையில் நடந்த பாஜக நிகழ்ச்சியில் இளைஞரணி தலைவருக்கு பரிசாக துப்பாக்கி கொடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை புறநகர் மாவட்ட புதிய இளைஞரணி, நிர்வாகிகள் கூட்டம் திருப்பாலையில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியை சேர்ந்த பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் கலந்து கொண்டார். அவருக்கு மண்டல தலைவரான தேவகிரி சால்கா என்பவர் துப்பாக்கியை பரிசாக வழங்கினார்.
தேவகிரி சால்கா மதுரை அய்யர் பங்களாவில் அரசு உரிமத்தோடு ஏர்கன் தயாரிப்பவர் என்றும், அதன் காரணமாக சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வத்திற்கு அந்த ஏர்கன்னை நினைவு பரிசாக கொடுத்ததாக கூறப்படுகிறது.
பொதுவாக கட்சி நிகழ்ச்சிகளில் தலைவர்களுக்கு வீரவாள் பரிசாக வழங்கப்படும் நிலையில், பாஜகவினர் சற்று வித்தியாசமாக ஏர்கன்னை பரிசாக கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் பரிசாக வழங்கப்பட்ட துப்பாக்கி பாதரச குண்டுகள் வைத்து சுடக்கூடிய துப்பாக்கி எனவும், உண்மையான துப்பாக்கி இல்லை எனவும் நிகழ்ச்சியை நடத்திய பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
Loading More post
அதிமுகவில் இருந்து தேமுதிக விலகல் - அடுத்தது என்ன?
”அதிமுக டெபாசிட் இழக்கும்; தேமுதிகவுக்கு இன்று தீபாவளி!” - எல்.கே.சுதீஷ்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!
‘எங்களைக் காப்பியடிக்கிறார்கள்!’ - திமுகவை கடுமையாக விமர்சிக்கும் கமல்
"தோனியை கேப்டனாக்க பரிந்துரைத்ததே சச்சின்தான்!" - உண்மையை உடைத்த சரத் பவார்
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!