மீண்டும் தனுஷை இயக்கும் வெற்றிமாறன்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் 'ஜெகமே தந்திரம்' படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார் தனுஷ். மாரி செல்வராஜ்  இயக்கும் 'கர்ணன்' படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கிவிட்டன. பாலிவுட்டில் 'அட்ரங்கி ரே'யில் நடித்து வரும் தனுஷ், கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


Advertisement

லேட்டஸ்ட் செய்தியாக இயக்குநர் வெற்றிமாறனின் படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் பற்றி சமூகவலைதளத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்துள்ள தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இவரது தயாரிப்பில் ஜூலையில் 'வடசென்னை 2' படத்தில் இருவரும் இணைவதாகப் பேசப்பட்டது.

image


Advertisement

வெற்றிமாறனின் முதல் படமான 'பொல்லாதவன்', ஆடுகளம், வடசென்னை, அசுரன் என தனுசுடன் இணைந்த படங்கள் மிகப்பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளன. அதனால் வெற்றிமாறனுடன் தனுஷ் இணையும்போது அதுவொரு வெற்றிப்படமாகத்தான் இருக்கும். சூரியுடன் ஒரு படம், சூர்யாவுடன் வாடிவாசல் என வெற்றிமாறனின் பட்டியலில் படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

loading...

Advertisement

Advertisement

Advertisement