உலகின் சிறந்த படங்களில் ‘மைக்கேல் மதன காமராஜன்’; நடிகர் பிரித்விராஜ் பாராட்டு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தை ’உலகின் சிறந்த படங்களில் ஒன்று’ என்று நடிகர் பிரித்விராஜ் பாராட்டியுள்ளார்.


Advertisement

 நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான மைக்கேல் மதன காமராஜன் படம் பெரும் வசூலைக் குவித்தது. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் கமல் நான்கு கெட்டப்பில் திருடன், தொழிலதிபர், சமையல்காரர், தீயணைப்பு வீரர் என நடிப்பில் வெரைட்டி காட்டியிருப்பார்.

image


Advertisement

நடிகர்கள் மட்டுமல்ல பொதுமக்களுக்கும் பிடித்தப் படம் இது. எப்போதும் சிரிக்க ரசிக்க வைக்கும் நகைச்சுவை திரைப்படம். படம் வெளியாகி கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் நடிகர் பிரித்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒரு சில படங்கள்தான் உங்களை மகிழ்ச்சியாக்கும். அந்த வரிசையில் மைக்கேல் மதன காமராஜன் படமும் ஒன்று. இது உலக சினிமாவில் சிறந்த படங்களில் ஒன்றாகும்” என்று குறிப்பிட்டுள்ளவர் ஊர்வசியின் நடிப்பையும் பாராட்டியிருக்கிறார்.

image

இப்படத்தில், நடிகர் கமல், நாகேஷ், கிரேசிமோகன், மனோரமா, குஷ்பு, ஊர்வசி,ரூபிணி ஆகியோர் நடிப்பில் அசத்தியிருப்பார்கள்.


Advertisement

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement