உடல் ஆரோக்கியத்திற்கு மாளவிகா மோகனன் குடிக்கச்சொல்லும் ஜூஸ்கள்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகை மாளவிகா மோகனன் தனது ஹெல்த் சீக்ரெட் ரெசிபியை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.


Advertisement

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’பேட்ட’ படத்தில் சசிகுமார் ஜோடியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அடுத்ததாக இண்டாவது படத்திலேயே நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழின் முன்னணி நடிகை ஆகிவிட்டார். மாஸ்டர் படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

image


Advertisement

கொரோனாவால் சினிமா பிரபலங்கள் வீட்டில் முடங்கியுள்ள நிலையில் நடிகை மாளவிகா மோகனன் தனது ஹெல்த் சீக்ரெட் ரெசிபியை இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்துள்ளார்.

image

அதில், ’கேரட், பீட்ரூட், தக்காளி, பூசணி, நெல்லிக்காய் இவற்றை தினமும் ஜூஸாக குடித்துவந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம். நான் தினசரி இந்த ஜூஸ்களை குடித்துவிடுவேன். உடல் ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்த பானம். இதனை ஒருமுறை பழக்கப்படுத்திக்கொண்டால் ஒருநாள் குடிக்கவில்லை என்றாலும் நாள் முழுமையடையாது. இதில், நிறைய வைட்டமின்களும் ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன’  என்று தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement