பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில், அவரது மேனேஜரும் காதலி ரியா சக்ரவர்த்தியின் சகோதரரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
பாலிவுட்டின் முன்னணி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜுன் 14 ஆம் தேதி தனது மும்பை பாந்த்ரா வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணத்திற்கு பாலிவுட்டில் நிலவிவரும் வாரிசு அரசியல் என்று காரணம் சொல்லப்பட்டாலும், மறுபுறம் மன அழுத்தம் காரணமாகத்தான் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துண்டார். அதற்கான மாத்திரைகளும் உட்கொண்டார் என்ற பல்வேறு தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், அவரது தற்கொலைக்கு காதலி ரியா சக்ரவர்த்தி பிரிந்து சென்றதுதான் என்றும், ’சுஷாந்துக்கு தெரியாமலேயே தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கொடுத்துள்ளனர்’ என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் ரியா மீது சுமத்தப்பட்டது
அதோடு, ரியா சக்ரவர்த்தி, பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளரும் நடிகை ஆலியா பாட்டின் தந்தையுமான மகேஷ்பாட்டுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சுஷாந்த் தற்கொலை வழக்கு தொடர்பாக ரியா சக்ரவர்த்தியின் தம்பி செளவிக் சக்ரவர்த்தியும், சுஷாந்தின் மேனேஜர் சாமுவேல் மிராண்டாவையும் கைது செய்த போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்கள் இருவரும் செப்டம்பர் 9 ஆம் தேதிவரை உள்ளூர் காவல் நிலையத்தில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Loading More post
12-ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி: பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு
வெளியானது தேமுதிக கேட்கும் 20 தொகுதிகளின் உத்தேச பட்டியல்?
ரமலான் அன்று சி.பி.எஸ்.இ தேர்வு; தேதி மாற்றம் பரிசீலிக்கப்படும் என மத்திய அமைச்சர் பதில்
மார்ச் 10-ல் வெளியாகிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல் : மு.க.ஸ்டாலின் தகவல்
3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்; நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை