செல்ல நாய்க்குட்டி டயானாவின் பிறந்தநாள் - இன்ஸ்டாவில் பதிவிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது செல்ல நாய்க்குட்டி டயானாவின் 4 ஆம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.


Advertisement

உலக அழகிப் பட்டத்தை வென்றவுடன் முதன் முதலில் நடிகையாக பிரியங்கா சோப்ரா அறிமுகமானது நடிகர் விஜய்யின் தமிழன் படத்தில்தான். அதனைத்தொடர்ந்துதான் பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு முன்னணி நடிகையாகி ’ஃபேஷன்’ படத்திற்காக தேசிய விருதையும் வென்றார்.

image


Advertisement

15 ஆண்டுகளாள பாலிவுட்டில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்தவர் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர் நிக் ஜோனஸை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

image

திருமணத்திற்குப்பிறகு பிரியங்கா சோப்ராவும் அவரது கணவர் நிக் ஜோனஸும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தங்கள் காதல் இல்லத்தில் வசித்து வருகின்றனர். அவர்களோடு செல்ல நாய்களும் வசித்து வருகின்றன. இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில், தனது நாய் டயானாவுக்கு பிறந்தநாள் வீடியோவுடன் கூடிய வாழ்த்தைப் பதிவிட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா.


Advertisement

https://www.instagram.com/stories/priyankachopra/2391016309921759261/       

அந்தப் பதிவில், “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மை லிட்டில் டி.டி. அதற்குள் நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டதை நம்ப முடியவில்லை.நான் உன்னை அதிகம் காதலிக்கிறேன்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். இந்த தம்பதிகள் ஜினோ என்ற மற்றொரு நாயையும் வளர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement